Social Icons

Sunday 27 October 2013

இஸ்ரேலிய சதிக்குள் சிக்கும் இலங்கை இனவாதிகள்

சமாதான விரும்பிகளான இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்களை ஒருங்கிணைத்து முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகும் நிலை உள்ளதென சந்தேகம் தெரிவித்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கருத்துக்களை ஆழ்ந்த அரசியல் கண்ணோட்டத்துடன் பத்திரிக்கையாளர் லதீப் பாருக் அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இனவாத அடிப்படை தொடர்பிலும், இஸ்ரேலின் இலங்கை உள்நுழைவு மற்றும் இந்திய பெரும் கண்டத்தில் இஸ்ரேல் எதிர்காலத்தில் செலுத்தவுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் இவ்வாக்கத்தின் மூலம் சுருக்கமாகவும், தெளிவாகவும் விபரிக்கப்பட்டுள்ளது. – MISc
……………………
முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் உதயம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜ்பக்ஷ அவர்களின் அண்மைய அறிவிப்பு முஸ்லிம் சமூகத்தைத் திடுக்கிடச் செய்துள்ளது.
கலதாரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குவதிகளையும், முஸ்லிம் கடும்போக்குவாதிகளையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலையில் நாடு இருப்பதாக கோத்தபாய இதன் போது தெரிவித்தார். “சில வெளிநாட்டுக் குழுக்கள், இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னை உலகளாவிய முஸ்லிம் சமூகத்தோடு கூடுதலாகத் அடையாளப்படுத்துவதை ஊக்குவிக்க முயன்று வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. இதன் மூலம் ஏனைய சமூகங்களுடனான முஸ்லிம் சமூகத்தின் ஒருங்கிணைப்பை அவை குறைக்கின்றன. பிராந்தியத்திலும், உலகளவிலும் முஸ்லிம் கடும்போக்குவாதம் பரவி வருவது நன்கு அறியப்பட்டதொரு உண்மையாகும்”.
குழப்பங்களை தோற்றுவித்து வருகின்ற சிங்களக் கடும்போக்குவாதிகள் யார் என்பது அனைவரும் அறிந்த விடயம். முஸ்லிம் கடும்போக்குவாதிகள் யார்? சமூகத்தின் எந்த மட்டத்திலும் இத்தகைய கடும்போக்குவாதத்தை அவதானிக்க முடியவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள், சிங்களக் கடும்போக்குவாதிகளின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிங்கள சமூகத்தை மேலும் தூண்டுவதற்கே வழி வகுக்கும்.
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பரந்து பட்ட நடவடிக்கைகளை இனவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள ஒரு காலப் பகுதியிலேயே பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டதொரு சமூகமாக இருந்தாலும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா குறிப்பிட்டது போல், முஸ்லிம் சமூகம் ஒரு சமாதானத்தை நேசிக்கின்ற சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. அது இன்று நேற்று வந்து குடியேறிய சமூகமும் அல்ல. ஆயிரம் ஆண்டும்களுக்கு முன்பே குறியேறி, நாட்டில் ஒருங்கிணைந்ததொரு சமூகமாக அது இருந்து வருகிறது.
யுத்தத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் யுத்தத்தின் முடிவோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எனினும், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக, இன்று முஸ்லிம்கள் ஏச்சுப் பேச்சுக்களுக்கும், தாக்குதல்களுக்கும், ஓரங்கட்டல்களுக்கும் முகங்கொடுக்கிறார்கள்.
இன்று சிங்கள இனவாதிகள்தான் சமூகங்களின் ஒருங்கிணைப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள். பெரியளவில் இடம்பெற்று வருகின்ற சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள் முஸ்லிம்களை அரச, தனியார், பொலிஸ், இராணுவத் துறைகளில் இருந்து ஓரங்கட்டியுள்ளன. ஜே.வீ.பீ தலைவர் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டது போல், சிங்கள வியாபாரிகள் சிலர் முஸ்லிம் வியாபாரங்களை நசுக்குவதற்காகவும் இக்கும்பலைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இத்தனைக்குப் பிறகும் முஸ்லிம் சமூகம் அமைதியாக இருக்கின்றமை அவர்களது சமாதானத்தையும், அமைதியையும் விரும்புகின்ற தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். பல ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த சமூக உறவை உடைத்து நொருக்கும் வகையில் செயல்படும் இவ்வினவாதக் கும்பலின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதே நாட்டின் இன்றைய உடனடித் தேவையாகும்.
சமூக, பொருளாதார, சமய மற்றும் கலாசாரத் தளங்களில் இயங்குகின்ற முஸ்லிம் நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இயங்குகின்ற அதனோடு தொடர்புபட்ட நிறுவனங்களுடன் தொடர்புகள் இருப்பது உண்மையே. ஆனால், இவற்றில் எதுவுமே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல.
முஸ்லிம் விரோத அந்நிய சக்திகளால் நிதியளிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்ற இவ்வினவாத சக்திகள்தான் அடிப்படையற்ற இக்குற்றச் சாட்டின் பின்னணியில் இருக்க வேண்டும் என முஸ்லிம்கள் சந்தேகிக்கிறார்கள். அதுதானே அவர்களது உள்நாட்டு, வெளிநாட்டு எஜமானர்களின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்யும்?
இஸ்ரேலிய சதி.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பவற்றின் கூட்டு ஆக்கிரமிப்பு முஸ்லிம் நிலங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில், முஸ்லிம்கள் சிலர் ஆயுதங்களை ஏந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1989 இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு, உலகின் ஒரே சுப்பர் பவராக மாறிய ஐக்கிய அமெரிக்கா, உலகைக் கொலைக் களமாக்கியது. ஜனநாயகம், சுதந்திரம், நீதி, மனித உரிமை என்பவற்றின் காவலாகத் தன்னை சித்தறிக்கும் அமெரிக்காவின் அத்திவாரம் அழிவுகளின் மீதும், சுரண்டல்களின் மீதுமே நிறுவப்பட்டுள்ளது. மேற்கையும், அதனூடாக உலகையும் கட்டுப்படுத்துகின்ற ஆயுதக் கம்பனிகள், எண்ணெய்க் கம்பனிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஊடகங்கள், யூத லொபிகள் என்பன தமக்கே உரிய நிகழ்ச்சி நிரலோடு அங்கு இயங்கி வருகின்றன.
சர்வதேச அளவில் இஸ்ரேலும், அதன் அமெரிக்க, ஐரோப்பிய நேச சக்திகளும் மத்திய கிழக்கைக் குட்டிக் குட்டி இராச்சியங்களாக உடைத்து, இஸ்ரேலின் மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. பலஸ்தீனியர்களின் இறந்த உடல்களின் மீதும், திருடப்பட்ட பலஸ்தீனிய நிலத்தின் மீதும்தான் இஸ்ரேல் அமைந்திருக்கிறது.
 செப்டம்பர் 11 தாக்குதல் கூட, இஸ்ரேலியப் புலனாய்வு அமைப்பான மொஸாட்டும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI ஐயும், உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் சேறு பூசுவதற்கும், முஸ்லிம் நாடுகள் மீதான அவற்றின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்குமாக இணைந்து நடாத்திய நாடகம் என்ற சந்தேகமும் பரவலாக இல்லாமல் இல்லை.
அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நேட்டோ நாடுகள் முஸ்லிம் நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூக்கை நுழைத்தன. பொஸ்னியா, கொசோவோ, செச்னியா, அல்பானியா, ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஈராக், சோமாலியா, லிபியா, மாலி, தற்போது சிரியா என இந்த வரிசையில் பல நாடுகள். எதிர்காலத்தில் பாகிஸ்தானும், ஈரானும் இந்த வரிசையில் சேரலாம்.
நேட்டோ மற்றும் அமெரிக்க குண்டுகளுக்கும், ஆயுதங்களுக்கும் இரையாகின்றவர்கள் குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது கூட இல்லை. அமெரிக்க இராணுவ ஜெனரல் டொம்மி பிராங்க்ஸ் ஒரு முறை குறிப்பிட்டார்: “நாம் உடல்களை எண்ணுவதில்லை”.
இவ்விதம் தமக்கெதிராக இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஆயுதங்களை ஏந்தியவர்களை மேற்கு ஊடகங்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றன. இஸ்லாம் குறித்த பீதி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அடுத்த ஹொலகோஸ்ட் (கூட்டுப்படுகொலைகள்) முஸ்லிம்களுக்கு எதிரானதாக அமைந்து விடுமோ எனத் தான் அஞ்சுவதாக Dortmunt பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைப் பேராசிசிரியர் Wolfram Richter தெரிவித்துள்ளார். எனினும், முஸ்லிம் நாடுகளில் ஹொலகோஸ்ட் ஆரம்பித்து அவை ஏற்கனவே தரிசு நிலங்களாக மாற ஆரம்பித்து விட்டன என்பதே உண்மை. முஸ்லிம் இரத்தம் ஆராக மத்திய கிழக்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது, அதன் மூலம் மேற்குலக ஆயுதக் கம்பனிகள் பிழைப்பு நடாத்தி வருகின்றன.
ஆயுதக் கம்பனிகளால் பெருமளவில் உரிமை கொள்ளப்பட்டுள்ள, சுதந்திர ஊடகங்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மேற்கு ஊடகங்கள், உலகத்தின் காதுகளில் பூ சுற்றி வருகின்றன. இலங்கை போன்ற நாடுகளின் ஊடகங்களும் தமது உலகச் செய்தித் தேவைகளுக்காக இச்சர்வதேச ஊடகங்களிலேயே தங்கியுள்ளன.
1950 முதல் இலங்கைக்குள் ஊடுறுவ முயன்று வந்த இஸ்ரேலுக்கு தற்போது ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இஸ்ரேலுடன் வளர்ந்து வரும் நாட்டின் நெருங்கிய உறவு, தமக்குப் பெரும் அழிவைக் கொண்டு வரலாம் என்ற அச்சத்தை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
நாஸிப் பாணியிலான இஸ்ரேலின் பின்னணி, அவர்களது இயலுமை போன்ற அம்சங்கள் குறித்து எதுவும் தெரியாத அரசியல்வாதிகள். ஊடவியலாளர்கள், வர்த்தகர்கள், புதிதாகக் கிடைத்துள்ள அதன் நட்பினால், குசலம் கொண்டாடி வருகிறார்கள். இஸ்ரேல் மூக்கை நுழைக்கும் இடங்களிலெல்லாம், முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதற்கு அங்குள்ள கடும்போக்கு சக்திகளைத் தேர்ந்தெடுத்து, இனங்கள் இடையிலான கசப்புணர்வைத் தூண்டி, அதில் குளிர் காய்கின்ற கைங்கர்யத்தைத்தான் அது செய்து வருகின்றது.
உதாரணமாக, டில்லியைத் தளமாகக் கொண்ட “மில்லி கஸட்” பத்திரிகை, முஸ்லிம் விரோதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக ஐரோப்பா ஊடாக இஸ்ரேலிடம் பெருந்தொகைப் பணத்தை இந்தியக் கடும் போக்கு அமைப்புக்கள் பெற்று வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. (1-15, டிசம்பர், 2009).
2008 ஆம் ஆண்டில் மாத்திரம் இவ்விதம் 7877 கோடிகளை ஹிந்துத்துவ அமைப்புக்கள் பெற்றுக் கொண்டதாக இந்திய உள்துறை அமைச்சின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. “இந்தியாவின் சமூக அரசியல் சூழலை ஹிந்துத்துவப் பயங்கரவாதிகள் விஷாமாக்கி வருகிறார்கள் என்றும், அதற்கு நிதி வழங்குவதன் மூலமாக இஸ்ரேல் உதவி வருவதாகவும் இருந்து வருகின்ற நம்பிக்கையை வலுவூட்டுவதாக இந்த விசாரணை அமைந்துள்ளது” என அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சுதந்திரத்தின் காரண கர்த்தாக்களின் ஒருவரான பெஞ்சமின் பிராங்கிளின் தனது பிரபல்யமான தீர்க்கதரிசனத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
 “இவர்கள் (யூதர்கள்) ஐக்கிய அமெரிக்காவில் நுழைவதை தடைசெய்யவில்லையானால், இன்னும் இரு நூறு ஆண்டுகளுக்குள் பெரும் தொகையானவர்கள் இங்கு வந்து குவிந்து விடுவார்கள். எமது நிலத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள். அழிப்பார்கள். எந்த வகையான அரசாங்க முறைக்காக நாம், அமெரிக்கர்கள் இரத்தத்தையும், உயிர்களையும் இழந்தோமோ, காயங்களை சுமந்து கொண்டோமோ, அதனை மாற்றி அமைத்து விடுவார்கள். எமது சுதந்திரத்தை அபாயத்திற்குட்படுத்தி விடுவார்கள்………..”
அமெரிக்கர்களைக் குழப்பி விடாமல் கவனமாக இருக்குமாறு 2001 இல் முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷெரோன் ஒரு முறை தனது வெளிநாட்டமைச்சர் ஷிமோன் பெரஸ்ஸிடம் தெரிவித்த போது, “நாம், யூதர்கள்தான் அமெரிக்காவைக் கட்டுப்படுத்துகிறோம். அமெரிக்கர்களும் அதனை அறிவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
பிராங்கிலினின் எதிர்வு கூறலுக்கு ஏற்ப யூதர்கள் இன்று அமெரிக்காவின் உண்மையான ஆட்சியாளர்களாகத் திகழ்கிறார்கள். எந்த அரசாங்கம் பதவியில் அமர வேண்டும் என்பதையும், வெள்ளி மாளிகையில் வீற்றிருக்கப் போகின்றவர்கள் யார் என்பதையும் யூத லொபிகளே தீர்மானிக்கின்றன என்று கூறும் அளவுக்கு யூதர்கள் பலம் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் யூத ஆதிக்கம் குறித்து எவரும் பேசத் துணிகிறார்களில்லை.
இப்பின்னணியிலேயே இலங்கையில் இடம்பெற்று வருகின்ற முஸ்லிம் விரோதப் பிரசாரங்கள் நோக்கப்பட வேண்டும். பயங்கரமான குற்றச்  செயல்களை இழைத்து விட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதுதான் இஸ்ரேலின் கைங்கர்யம்.
இதே வேளை கோதபாய ராஜபக்ஷவின் கருத்தை வரவேற்றுள்ள பொது பல சேனா, தனது அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது:
“இஸ்லாமியக் கடும்போக்குவாதத்திற்கு எதிராகத் தொடுத்த கருத்தியல் ரீதியான யுத்தத்தின் ஒரு முக்கியமானதொரு வெற்றியாகவே பொது பல சேனா இதனைக் கருதுகிறது. பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து வந்த அரசியல்வாதிகளுக்கும், ஏனைய சக்திகளுக்கும் இவ்வறிக்கை போதுமான பதிலை வழங்கி இருப்பதாக பொது பல சேனா கருதுகிறது. எல்.லீ.டீ.ஈ பயங்கரவாதம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அடையாளம் காணப்பட்டிருந்தால், நாற்பதாண்டு கால யுத்தம் இடம்பெற்றிருக்காது. இதே போன்று, இஸ்லாமியப் பயங்கரவாதம் உரிய முறையில் அடையாளம் காணப்படா விட்டால், இன்னும் இருபது ஆண்டுகளில் அது வெளிச்சத்திற்கு வரும் என்றே பொது பல சேனா குறிப்பிடுகின்றது…. உண்மையைப் பேசுவது அரசியல் வாதிகளினதும், அரச அதிகாரிகளினதும் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் இருக்கின்ற நிலையில், கோதபாய ராஜபக்ஷ அவர்களின் இத்தெளிவான பேச்சு வியந்து பாராட்டத்தக்கதாகும்….”
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ அல்லது அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவோ பிரதான அரசியல் கட்சிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட இனவாதக் கொள்கைகள் இத்தீவை ரத்தக் காடாக இறுதியில் மாற்றி விட்டது. சுதந்திரமாக பௌத்த கடும்போக்குவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதை நோக்கும் போது, கடந்த கால வரலாற்றில் இருந்து எதுவித பாடத்தையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தற்போதைய குழப்பமான அரசியல் சூழலில் சிங்கள கடும் போக்குவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படா விட்டால், சமாதானம், ஸ்திர நிலை, புனர் வாழ்வு என்பன தொடர்பாக கதைக்கப்படுகின்ற சகல அம்சங்களும் தொலை தூரக் கனவாகவே இருந்து விடப் போகின்றன.
                                                                                     Thanks : Rasmin

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்